சுனந்தன் கமரக்கர்; கொரோனா யுத்தம் தினமும் 58KM சைக்கிள் ஓட்டும் வீரர்
கொரோனா நாட்டில் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் ஒட்டு மொத்த நாடே ஊரடங்கில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்துகள் எதுவும் இல்லை.
மூத்த தீ அணைப்பு வீரரான கமரக்கர் தினமும் 58km சைக்கிளில் பயணம் செய்து வேலைக்கு செல்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்து 29km தொலைவில் ஆபீஸ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சண்டிப்பூர் தீ அணைப்பு நிலையத்தில் என்ஜின் டிரைவர் ஆகா பணி புரியும் இவருக்கு சைக்கிளில் பயணம் செய்வது புதிய காரியமில்லை.
இந்த சைக்கிள் பயணம் குறித்து கமரக்கர் கூறியதாவது, நான் நாட்டின் அவசர இக்கட்டான நிலையில் பணி புரிகிறேன். பேருந்து ரயில் இல்லாதது பெரிய விஷயம் இல்லை.
நான் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். சில நேரம் எனக்கு அசதியாக இருக்கும்பொழுது இரண்டு நாட்கள் ஆஃபீசில் தங்கி விடுவேன் என கூறியுள்ளார்.
சண்டிப்பூர் தீ அணைப்பு அலுவலகத்தில் 19 பேர் பணியில் உள்ளனர். நாடே ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் அவர்கள் அனைவரும் சுழற்சியில் பணி புரிந்து வருகின்றனர்.