Home சினிமா கோலிவுட் 35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!

35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!

260
0
Parthiepan

Parthiepan; 35 நாட்கள் லாக்டவுனால் குடியை நிறுத்திட்டாங்க: பார்த்திபன் பாராட்டு!கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை 35 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில், நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் என்று நடிகர் பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுவரை 35 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில், நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திட்டாங்க என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு பற்றியும், நடிகை ஜோதிகாவின் பேசியது சர்ச்சையானது குறித்தும் நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு பிரச்சனையில் மருத்துவர்களுக்கு அடுத்து மிகவும் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஊடகத்துறையினர்.

தங்களது உயிரையும் பணயம வைத்து, செய்திகளை சேகரித்து மக்களிடம் கொடுக்கிறார்கள். இது பாராட்டுதலுக்குரிய விஷயம். அணுசக்தி போரை விட, செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறைய பேருக்கு நன்மைகளும் நடந்துள்ளன. ஆம், குடும்பத்தினருடன் பலர் மகிழ்ச்சியுடன் இருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இவ்வளவு ஏன், கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளால் நிறைய பேர் குடிப்பழக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். என்னைப் போன்று சிலரை உடற்பயிற்சி செய்யவும் தூண்டிருக்கிறது.

வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு மருத்துவமனைகள் திறந்திருக்கின்றன. ஜோதிகாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிட்டுள்ளார்.

எங்களைப் போன்ற பிரபலங்கள் செய்கிற உதவிகளை விட, பொதுமக்கள் செய்யும் உதவிகள் பாராட்டுக்குரியது. மனிதம் வளர்ப்போம். இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleடிடிக்கு இப்படி தான் மாவுக்கட்டு போடப்பட்டது – அதிர்ச்சி தகவல்
Next articleகொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்; மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here