Ponmagal Vandhal First Single: வா செல்லம் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து வா செல்லம் (Vaa Chellam) ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.
தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்தப் போஸ்டரில் ஜோதிகா வழக்கறிஞராக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், இப்படம் பெண்களையும், குழந்தைகளையும் மையப்படுத்திய படம் என்றும், பெண்களுக்கு எதிராக சம்பவங்களை சுட்டிக்காட்டும் விதமாகவும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் சிவக்குமாரின் மகளும், ஜோதிகாவின் நாத்தனாருமான பிருந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மகள் வந்தாள் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான வா செல்லம் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், யூடியூப்பில் வா செல்லம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வந்துள்ளது. இந்தப் பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார்.
பொன்மகள் வந்தாள் Ponmagal Vandhal படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.