Ponmagal Vandhal Second Look; பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு மகளிர் தினத்தில் சிறப்பு செய்துள்ளது ஜோதிகாவின் பொன்மகள் படக்குழு.
ஜோதிகா
ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.
இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal)
தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.
அண்மையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், ஜோதிகா வழக்கறிஞர் தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார்.
ஆதலால், இந்தப் படம் முழுக்க முழுக்க பெண்களை பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர்
த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் (Ponmagal Vandhal Second Look) வெளியாகியுள்ளது.
இதில், ஜோதிகா கையில் ஒரு ஃபைல் வைத்திருக்கிறார். மேலும், அவரது பின்புறம் தாமதமான நீதி அநீதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, கையில் துப்பாக்கி மற்றும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுத்தில்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.
இதற்கு முன்னதாக நடிகை அம்பிகா, லட்சுமி, அனுஷ்கா, நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், அஜித், விஜய், கமல் ஹாசன் ஆகியோர் பலர் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகை ஜோதிகாவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.