Home விளையாட்டு Indw vs Ausw: ஹீலி-மூனி அதிரடியில் 184 ரன்கள் இலக்கு

Indw vs Ausw: ஹீலி-மூனி அதிரடியில் 184 ரன்கள் இலக்கு

306
0
Indw vs Ausw

Indw vs Ausw: T20 Final Update; ஹீலி-மூனி அதிரடியில் இந்தியாவிற்கு 184 ரன்கள் இலக்கு என நிர்ணயித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக்கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா ஆடவர் அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்டார்க் மனைவி அலிஷா ஹீலி இந்த மகளிர் பவுலர்கள் தொம்சம் செய்து வருகிறார்.

முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா 14 ரன்கள் எடுத்தது. ஹீலி கொடுத்த சற்று கடினமான கேட்சை ஷபாலி விட்டுவிட்டார். ராஜேவஸ்வரி யிம் ஹீலிக்கு மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய அலிஷா ஹீலி 75 (39 பந்து) ரன்கள் குவித்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அவருடன் களம் இறங்கிய மூனி இறுதி வரை பொறுமையாக ஆடி 78 (54 பந்து) ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் கணிசமாக ரன்களை வாரி வழங்கினார்கள் சிகா பான்டே 4 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் கொடுத்தார். தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க இந்தியா 11 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்தியாவிற்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

Previous articleபொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர்!
Next articleமகளிர் தின கொண்டாட்டத்தில் நயன்தாரா!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here