Home சினிமா கோலிவுட் கடின உழைப்பாளி, நேர்மையானவர்: ஐ பட உதவி இயக்குநருக்கு ஷங்கர் இரங்கல்!

கடின உழைப்பாளி, நேர்மையானவர்: ஐ பட உதவி இயக்குநருக்கு ஷங்கர் இரங்கல்!

336
0
Shankar Tweet Arun Prasath

Arun Prasath Passed Away; விக்ரமின் ஐ பட உதவி இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் பலி! பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த ஐ படத்திற்கு உதவி இயக்குநராக இருந்த அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியான சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கரின் ஐ படத்தில் உதவி இயக்குநராக இருந்த அருண் பிரசாத் சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் ஐ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏவி அருண் பிரசாத். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 4ஜி படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திற்காக தனது பெயரை வெங்கட் பாக்கர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். 4 ஜி படத்தில் காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊரான கோவை அருகிலுள்ள அன்னூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கேயே தங்கியிருந்த அருண் பிரசாத் இன்று காலை தனது பைக்கில், மேட்டுப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில், அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருணின் இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண் பிரசாத்திற்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அவர் ஆசைப்பட்டு எடுத்த முதல் படம் இது. இன்னும் திரைக்கு வரவேயில்லை.

அதற்குள்ளாக அவர் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார். அருணின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ஷங்கர் தனது டுவிட்டரில், இளம் இயக்குநரும், எனது முன்னாள் உதவியாளருமான அருண் பிரசாத் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. கடின உழைப்பாளி, நேர்மையானவும், எப்போதும் இனிமையானவர்.

உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஜிவி பிரகாஷின் 4 ஜி பட இயக்குநர் சாலை விபத்தில் பலி!
Next articleசனிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here