நீ என்ன அவ்வளவு பருப்பா? முனீஷ்காந்த், பிரேம்ஜியின் கொரோனா குறும்படம்! காமெடி நடிகர்கள் முனீஷ்காந்த், பால சரவணன், கருணாகரன் ஆகியோர் நடித்த குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் நடித்த கொரோனா குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டையே உலுக்கியது கொரோனா வைரஸ். கடந்த 5 மாதங்களாக உலக மக்கள் கொரோனாவால் பீதியடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக கொரோனா குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த குறும்படத்தில் முனீஷ்காந்த், பால சரவணன், பிரேம்ஜி, காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வீட்டில் இருந்து கொண்டு வெளியில் சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்தும், வீட்டிற்குள்ளேயே இருந்தால் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது குறித்தும் அந்த வீடியோவில் நடித்துக் காண்பித்துள்ளனர்.
இதில், முனீஷ்காந்த் சமையல் மாஸ்டர். அவர் பார்பிக்யூ வாங்கி வர காளி வெங்கட்டிடம் கூறுகிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பேப்பரில் வந்ததை படித்துக் காண்பிக்கிறார்.
பிறகு மட்டன் வாங்கிவர கூறுகிறார். அதற்கும் மறுப்பு தெரிவிக்கும் வகையில் ராயபுரத்தில் மட்டன் வியாபாரிக்கு கொரோனா என்று படிக்கிறார்.
இறுதியில், சாம்பார் வைக்க திட்டம் போடும் முனீஷ்காந்த் பருப்பு வாங்கி வர பிரேம்ஜியிடம் கூறுகிறார். அவரோ நான் வெளியில் சென்றால் போலீஸ்காரர்கள் நீ என்ன அவ்வளவு பருப்பா? என்று கேட்கிறார்கள் என்று கூறி பால சரவணனிடம் பருப்பு வாங்க கூறுகிறார்.
அவரோ, நான் இப்போது தான் கை கழுவுனேன். இனி கை கழுவதற்கு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். நீரின்றி அமையாது உலகு என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக கருணாகரன் கிட்ட வருகிறார் முனீஷ்காந்த்….
கருணாகரன் May ல மீட் பண்ணுவோம். இல்லையென்றால் மேல மீட் பண்ணுவோம் என்று டயலாக் பேசுகிறார்.
கடைசியாக வீட்டு வாசலை தாண்டி நானும் வர மாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது..பேச்சு வாட்சப்போடு தான் இருக்கணும்…என்று பால சரவணன் கூறுகிறார்.
வீரம் என்பது வீட்டிற்குள்ளேயே இருப்பது…காளி வெங்கட்…
வீட்டிற்குள்ளேயே இருப்போம்…கொரோனா பரவலை தடுப்போம். கருணாகரன்…
என்ன சொல்றாங்க….வீட்டுல இருக்க சொல்றாங்க…எவ்வளவோ பண்ணிட்டோம்..இத பண்ண மாட்டோமா என்று பிரேம்ஜி டயலாக் பேசியுள்ளார்.
அதோடு அந்த வீடியோவும் முடிகிறது. தற்போது இந்த கொரோனா குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.