Home சினிமா கோலிவுட் ஜாக்பாட் அடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! அடுத்து இவரோட ஜோடி!

ஜாக்பாட் அடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! அடுத்து இவரோட ஜோடி!

436
0
Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar; ஜாக்பாட் அடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! அடுத்து இவரோட ஜோடியா? நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

காஞ்சனா 3 படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காஞ்சனா 4 படம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்று அறிவிப்பு இல்லை.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து பாலிவுட்டில் லக்‌ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட்டில் இது ராகவா லாரன்ஸின் முதல் படம். வரும் மே மாதம் திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, Five Star கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார். ஒரு வேலை இது அந்த படமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், ராகவா லாரன்ஸின் இந்தப் படத்தை வேறொரு இயக்குநர் இயக்க இருக்கிறார். அவர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மாஃபியா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாஃபியா 2 படமும் உருவாக இருக்கிறது.

ப்ரியா பவானி சங்கர் தற்போது கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

Priya Bhavani Shankar Movie List:

மேலும், குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, பெல்லு சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக், துல்கர் சல்மானின் வான், அஹம் பிரம்மாஸ்மி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் பெல்லு சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப்பெண்ணே என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதில், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்திலும் நடிக்கிறார். இப்படி வரிசையாக ப்ரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅமேசான் ஓனர் Jeff Bezos எழு பில்லியன் டாலர்கள் அபேஸ்ஆனது : Coronavirus கைவரிசை
Next articleகேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகள் மூடப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here