Home சினிமா கோலிவுட் மனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

மனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி!

429
0
Raghava Lawrence Rs 3 Crore Donation

Raghava Lawrence; மனிதநேயம் உள்ள மனிதன்: ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி! நடிகர் ராகவா லாரனஸ் ரூ. 3 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ராகவா லாரனஸ் (Raghava Lawrence) அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு உதவும் வகையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டைகளையோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர். இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன என்று ஆர்.கே. செல்வணி விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், இந்த  தொகையை வைத்து இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், பின்னணி பாடகருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ராயபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு ரூ.75 லட்சம்

பிரதமர் நிவாரண நிதிக்கு PM Relief Fund ரூ.50 லட்சம்,

முதல்வர் நிவாரண நிதிக்கு CM Relief Fund ரூ.50 லட்சம்

நடன கலைஞர்கள் யூனியனுக்கு Dancer’s Union ரூ.50 லட்சம்

ஃபெப்சி FEFSI அமைப்புக்கு ரூ.50 லட்சம்

உடல் ஊனமுற்றோருக்கு Physical Abled ரூ.25 லட்சம்

என்று பிரித்து பிரித்து வழங்கியுள்ளார். இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒன்றை ராகவா லாரன்ஸ் செய்துள்ளார்.

ஆம், உடல் ஊனமுற்றோர் மற்றும் தின கூலி தொழிலாளர்கள் என்று யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால், ராகவா லாரன்ஸ் அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற அட்வான்ஸ் தொகையில் இருந்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபங்குனி பொங்கல்: வேண்டிய வரம் தருவாள் விருதுநகர் பராசக்தி மாரியம்மன்
Next articleஃபேமிலி குறும்படம்: வீட்டில் இருந்தபடியே படப்பிடிப்பா? இதுவும் நல்லாதான் இருக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here