Raghava Lawrence; கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி! கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகள் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
தனது ஆதரவற்ற குழந்தைகள் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது இந்த கொரோனா வைரஸ். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே கொரோனா பாதிப்பால் பலியாகி வருகின்றனர்.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இருந்த 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர்கள் அனைவரும் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது குழந்தைகள் சிகிச்சை முடிந்து பாதுகாப்பாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள், மருத்து பணியாளர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. எனது சமூக சேவை தான் குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகள் நலமுடன் மீண்டு வருவதற்கு பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.