Rambha Birthday; தொடை அழகி ரம்பா பர்த்டே டுடே! நடிகை ரம்பா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரம்பா பிறந்தநாள் இன்று.
கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி, ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. சினிமாவில் அறிமுகமான இவரது முதல் பெயர் அம்ரிதா.
அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படமான Aa Okkati Adakku என்ற படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரம்பா என்றே அறியப்பட்டார்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தேவயானி, சிம்ரன், லைலா ஆகியோருக்கு போட்டியாக சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்.
விஜய், பிரசாந்த், முரளி, கார்த்திக், அர்ஜூன், லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், முதன் முதலில் மலையாளத்தில் வந்த சர்கம் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்பூரி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பல படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சியிலும் வலம் வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2, 3,5 மற்றும் 7 ஆகிய சீசன்களுக்கு நடுவராக வலம் வந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனுக்கு நடுவராக இருந்துள்ளார். மேலும், ETV Telugu, E-TV, Zee Telugu ஆகிய டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் நடித்ததன் மூலம் பலரும் அவரை தொடை அழகி என்றே வர்ணித்துள்ளனர்.