Home சினிமா கோலிவுட் நயன்தாரா மீது ரஜினிக்கு என்ன மோகமோ? முருகதாஸ் சமரசம்

நயன்தாரா மீது ரஜினிக்கு என்ன மோகமோ? முருகதாஸ் சமரசம்

779
0
நயன்தாரா மீது ரஜினிக்கு என்ன மோகமோ?

நயன்தாராவை தர்பார் படத்திற்கு நாயகியாக புக் செய்யச் சொல்லி ரஜினி முருகதாஸுக்கு கட்டளையிட்டுள்ளார்.

ரஜினியின் கதாநாயகிகள்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தின் கதாநாயகிகளைத் தேர்வு செய்வதில் பெரும்பாலும் அவரே தான் முடிவு செய்வார்.

சிவாஜி படத்தின் நயகியாக நடிகை ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்யச்சொல்லி ஷங்கரிடம் கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் இருவர், ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என அடுத்தடுத்து நடித்து உலகஅழகி நான்தான் என ஐஸ்வர்யா ராய் தமிழ் மக்களிடம் பிரபலமானார்.

ஐஸ்வர்யா ராய் மறுப்பு

ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஷங்கர் கூறியபோது வயதானவர்களுடன் நடிக்க மாட்டேன் என ஐஷ்வார்யா ராய் மறுத்ததாக அப்போது செய்திகள் வெளியாகியது.

அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். ரஜினி அமிதாப்பச்சன் இருவரும் நன்கு பழக்கம்.

ஐஸ்வர்யா ராயை மடக்கிய ரஜினி

எந்திரன் படம் துவங்கப்பட்டபோது மீண்டும் ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டார் ரஜினி. இந்த முறை மாமனார் சிபாரி வேறு இருந்ததால் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ரஜினியுடன் மல்லுக்கட்டிய த்ரிஷா

அதேவேளை நீண்ட வருடமாக ரஜினியுடன் நடிக்க வேண்டும் என போராடிய சிம்ரன், த்ரிஷாவிற்கு ரஜினி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடிக்க சம்பளமே வேண்டாம் என த்ரிஷா அறிவித்தார். ஆனாலும் ரஜினி நடிக்கவே கூடாது என முடிவுடன் இருந்தார்.

இதனால் த்ரிஷா ஓப்பனாக ரஜினியை விமர்சனம் செய்த சம்பவங்களும் அரங்கேறியது. மேலும் பாலிவுட் நடிகைகளை கமிட் செய்வதை ரஜினி வழக்கமாக்கிக் கொண்டார்.

த்ரிஷாவின் ஆசை எப்படி சாத்தியமானது?

ரஜினியை யார் எப்படி சமாதானம் செய்தனர் எனத் தெரியவில்லை பேட்ட படத்தில் சிம்ரன்-த்ரிஷா இருவருமே நடித்துவிட்டனர்.

எனவே ரஜினி தன்னுடைய படத்தின் ஹீரோயின் யார் எனத் தேர்வு செய்வதில் அவரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

முருகதாஸ்-நயன்தாரா மனக்கசப்பு

முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். முதலில் கீர்த்தி சுரேசை நாயகியாக நடிக்க வைப்பது என முருகதாஸ் முடிவு செய்தார்.

ஆனால் ரஜினி, நயன்தாராவைக் கமிட் செய்துவிடும்படி கூறிவிட்டார். கஜினி படத்தில் நயன்தாராவிற்கு சரியான கதாப்பாத்திரம் இல்லை.

இதனால் நயன்தாரா-முருகதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன்பிறகு இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

தற்பொழுது ரஜினியே கேட்டுவிட்டார் வேறுவழி? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது என முருகதாஸ், நயன்தாராவைக் கமிட் செய்துவிட்டார்.

நயன்தாரா மீது என்ன மோகம்?

சந்திரமுகி, குசேலன் படத்தில் நயகியாக, சிவாஜி படத்தில் ஓப்பனிங் பாடல் என நயன்தாராவைக் கமிட் செய்யச் சொன்னதும் ரஜினியே,

தற்பொழுது தர்பார் படத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளார். 20K நடிகைகளில் அதிகமுறை ரஜினியுடன் நடித்தது நயன்தாரா தான்.

நயன்தாராவுடன் மீண்டும் மீண்டும் ரஜினி நடிக்க விருப்பப்படுவது என்ன காரணமாக இருக்கும் என நயன்தாரா பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

90-களில்   ரஜினியின் ஆஸ்தான நடிகையாக விளங்கியவர் மீனா. மீனாவுடன் தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.

தற்பொழுது நயன்தாராவை தன்னுடைய படங்களில் கமிட் செய்வதை வாடிக்கையாக்கி உள்ளார் ரஜினி.

அப்படி நயன்தாரா மீது ரஜினிக்கு என்ன மோகமோ? செண்டிமென்டோ? லேடி சூப்பர் ஸ்டாரோ? அவள் தான் உனக்கேத்த ஸ்டாரோ?

Previous articleசென்னை கொல்கத்தா இடையேயான ஐ‌பி‌எல் போட்டியில் அட்லீ-ஷாருக்கான் சந்திப்பு எதற்காக இருக்கும்?
Next articleபிளாக் ஹோல் (Black Hole) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது! ஒரிஜினல் புகைப்படம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here