Home சினிமா கோலிவுட் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

360
0
Ramya Pandian Photoshoot

ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்! ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன் ஜொலிக்கும் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நடந்து 3 நிகழ்ச்சிகளையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31 ஆம் தேதி வரையில் 6ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்ப எப்படியும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் ஆகும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் பிறகு தான் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, இந்நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும், கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்.

ஆகையில், விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், #RamyaPandian என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தையும், அவரது ஸ்டைலிஷான புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், டுவிட்டரில் 1,40,000 பாலோயர்ஸை கடந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சிவி குமாரின் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

இதனை அவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணங்களுக்காக ரம்யா பாண்டியனின் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகண்ணாலேயே பேசிய காதல் படம்: சுப்ரமணியபுரம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு!
Next articleபொண்ண பெத்தவன் பயப்படுற மாதிரி, தப்பு செய்றவனும் பயப்படனும்: கவின் ஆவேசம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here