Kavin; பொண்ண பெத்தவன் பயப்படுற மாதிரி, தப்பு செய்றவனும் பயப்படனும்: கவின் ஆவேசம்! நடிகரும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கவின், அறந்தாங்கி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் கவின் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமான நடிகர் கவின் தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராடனும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல.
நல்லா நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானா. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா? என்று கவின் தனது சமூக வலைத்தளத்தில் செய்து பதிவு செய்துள்ளார்
தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.