Home சினிமா கோலிவுட் SuperStar Anthem:பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் சூப்பர் ஸ்டார் ஆந்தம் வெளியீடு!

SuperStar Anthem:பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் சூப்பர் ஸ்டார் ஆந்தம் வெளியீடு!

369
0
Superstar Anthem Lyrical Video

Friendship First Single; பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் சூப்பர் ஸ்டார் ஆந்தம் வெளியீடு! லோஸ்லியா, ஹர்பஜன் சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சூப்பர் ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரண்ட்ஷிப் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லோஸ்லியா. இவர், பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இது லோஸ்லியாவின் முதல் படம்.

இந்தப் படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அர்ஜூன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இணைந்து இயக்கியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப். இந்தப் படத்திற்கு டி எம் உதய குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்று தொடங்கும் இந்தப் பாடல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு மரியாதை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டர், #SuperStarAnthem என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சிம்பு தனது குரலில் இந்தப் பாடலை பாடியுள்ளார். சூப்பர்ஸ்டார் ஆந்தம் என்ற பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். இவர், ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here