Kaadan Corona Virus; கொரோனாவால் காடன் ரிலீஸ் ஒத்தி வைப்பு! காடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராணா டகுபதி நடிப்பில் உருவான காடன் படத்தின் ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உலகையே பீதிக்குள்ளாக்கியிருப்பது கொரோனா வைரஸ் (Corona Virus). சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
இந்த நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக, சினிமா படக்காட்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காடன் படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோஸ் இன்டர்னேஷனல் (Eros International) நிறுவனம் எப்போதும் பார்வையாளர்களின் ஆர்வம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.
ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பார்வையாளர்கள் எப்போதும், கதைகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் தூண்டுகிறார்கள். அவர்களது ஆர்வம் புதிய படங்களை தயாரிக்க முன்வைக்கிறது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் காரணமாக காடன் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
எங்களது பார்ட்னர்ஸ், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
தொடர்ந்து நாட்டில் நடந்து வரும் சூழலை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதனால், புதிய வெளியீட்டு தேதியுடன் திரும்பி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி (Rana Daggubati) நடிப்பில் உருவாகி வரும் படம் காடன். தமிழில் காடன் என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படம் ஹிந்தியில் ஹாதி மேரே ஷாதி என்ற டைட்டிலிலும், தெலுங்கில் ஆரண்யா என்ற டைட்டிலிலும் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் ராணா டகுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கீத் சாம்ராட், ஷ்ரீயா பில்கோன்கர், ஷோயா ஹூசைன் ஆகியோர் நடித்துள்ளனர்.


