Home சினிமா கோலிவுட் 4ஆவது முறையாக விஜய் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி!

4ஆவது முறையாக விஜய் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி!

446
1
Thalapathy 65

Thalapathy65; 4ஆவது முறையாக விஜய் – ஏஆர் முருகதாஸ் கூட்டணி! தளபதி65 படத்திற்காக விஜய் மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார்.

விஜய் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி65 (Thalapathy65) படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master).

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்து முடிந்தது.

அப்போது பேசிய விஜய், தனது வீட்டில் நடந்த ஐடி ரெய்டும் ஜாலியாகத்தான் இருந்தது என்றும், அஜித் (Nanbar Ajith) மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் கோட் சூட்டில் வந்ததாக குறிப்பிட்டார்.

படக்குழுவினர் பலருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி 65 படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா, வெற்றி மாறன், மகிழ் திருமேனி ஆகியோர் உள்பட பலரிடம் கதை கேட்டு வந்ததாகவும், அதில் சுதா கொங்கரா கதை ஓகேவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆதலால், சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் தளபதி65 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வந்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியில், கத்தி, துப்பாக்கி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

SOURCER SIVAKUMAR
Previous articleRajkiran: என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்!
Next articleகொரோனாவால் காடன் ரிலீஸ் தள்ளி வைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here