RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு; Techofes 2020, டெகோஃபெஸ் 2020, ஆர்.ஜே.பாலாஜி எந்தக் கட்சி?
டெகோஃபெஸ் 2020
அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், தோனி கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்து கொடுத்தார்.
அப்போது சச்சினை தோளில் தூங்கி சுமந்து செல்வார்கள். அப்போது அதனைய பார்க்கும் போது நாமும் ஒரு இந்தியன் என்ற உணர்வு வந்திருக்கும்.
இதே போன்று ஏ.ஆர்.ரஹ்மான் இரு கைகளிலும் ஆஸ்கர் விருதை வைத்துக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என்பார். அப்போது நமக்கு பெருமைமிக்க இந்தியன் என்ற உணர்வு வந்திருக்கும்.
ஒவ்வொரு முறையும் இந்தியா கிரிக்கெட் போட்டியில் ஜெயிக்கும் போது, செயற்கைக்கோள் அனுப்பும் போது நம்மைவிட பெருமைப்படும் இந்தியர்கள் வேறு யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.
இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இப்போது நடப்பதையெல்லாம் பார்க்கும்போது இந்தியர்கள் என்ற உணர்வு வருகிறதா? என்றால் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.
அந்த சமயத்தில் நான் ஒரு வீடியோ வெளியிட்டேன்.அதில், சிவாஜி படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியைப் போன்று அப்படியா அப்போது இந்தியா கண்டிப்பாக வல்லரசு நாடாக மாறிவிடும் என்று பதிவிட்டிருந்தேன்.
ஒரு சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது, இது நல்லதுக்கு இல்லை என்று, ஆதலால், மறுபடியும் மன்னிச்சிடுங்க என்று மற்றொரு வீடியோ பதிவிட்டேன்.
ஆர்.ஜே.பாலாஜி எந்தக் கட்சி?
பலரும் என்னை இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். நான் எந்த பக்கமும் இல்லை. இத்தனை வருடங்களாக நாம் இந்தியர் என்ற உணர்வோடு தான் வாழ்ந்து வந்திருக்கிறோம்.
இதன் பிறகும் இருக்கப்போகிறோம். மக்களில் ஒருவனாக நம் எல்லோருக்கும் இப்போது பயமாக இருக்கிறது.
ஒரு அரசியல்வாதியாக அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மத்திய அரசு, மாநில அரசு என்று எந்த அரசாக இருந்தாலும், எங்களுக்கு தேவை ஒன்றே ஒன்றுதான். அதுவும் நிம்மதி மட்டுமே.
RJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு
நீங்கள் எத்தனை கோடி ஊழல் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். எவ்வளவு தப்பு வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.
கூட்டணி மாறிக்கோங்க, பேரம் பேசிக்கோங்க, ஆட்சியை கவிழுங்க, ஆட்சியை புடிங்க என்று என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.
ஆனால், எங்களை மட்டும் நிம்மதியாக இருக்க விடுங்கள். காலையில் வீட்டைவிட்டு கிழம்பும் ஒரு குழந்தையோடு அப்பா வீட்டிற்கு திரும்ப வரவில்லையென்றால், அந்த குழந்தையோடு வலி எப்படியிருக்கும்?
அந்த குழந்தையின் வாழ்க்கை முழுவதும் அப்படியே மாறிவிடும். ஆகையால் ஒரு தலைமுறையை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.