Home சிறப்பு கட்டுரை Leap Year History; கூகிள் டூடுல் இன்று

Leap Year History; கூகிள் டூடுல் இன்று

521
2
Leap Year History

Leap Year History; கூகிள் டூடுல் இன்று, Leap Day-Google Doodle Today,கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் அதிகமாக சேர்க்கப்படும் .இந்த ஆண்டு 366 நாட்களோடு லீப் ஆண்டு என எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Leap Day-Google Doodle Today

லீப் டே வாரலாரை அவ்வளவு எளிதாக ஓரிரு வரியில் நீங்கள் தெரிந்துவிட முடியாது. ஒட்டுமொத்த ஆங்கில நாட்காட்டியின் வரலாற்றை படித்து பார்த்தால் புரியும்.

உங்களுக்காக ஒரு எளிதான விளக்கம் இதோ

கிரகோரியன் நாட்காட்டி (Krikorian Calendar)

கி.பி 1582-ம் ஆண்டு பதிமூன்றாம் போப் கிரகோரி, ஜூலியன் நாள்காட்டியில் உள்ள பிழையை மாற்றியமைத்தார்.

அப்போது, மருத்துவராக இருந்த அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் ஜீலியன் நாட்காட்டியில் 11 நிமிடம், 14 வினாடி அதிகமாக உள்ளதைக் கண்டறிந்தார்.

இதனால், ஒவ்வொரு 130 வருடத்திற்கும், ஒரு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. எனவே, புனிதவெள்ளி பண்டிகை வருடத்திற்கு வருடம் மாறிக்கொண்டே இருந்தது.

அதாவது பூமி, சூரியனை முழுமையாக சுற்றிவரத் துல்லியமாக 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் (365.2422) ஆகிறது. ஆனால், சூலியஸ் சீசர் 365.25 என்ற முறையில் தோராயமாக நாட்காட்டியை உருவாக்கியிருந்தார்.

Leap Year History

இதன்படி, நான்கு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளைச் சேர்த்தால், 130 ஆண்டுகளுக்கு 24.22  மணி நேரம் அதிகமாகும்.

அதைச் சரிசெய்ய, ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும், ஒரு லீப் ஆண்டு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

அதாவது, 100-ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் வருடங்கள் இல்லை. 100-லும் 400-லும் வகுபடும் ஆண்டுகள் மட்டுமே லீப் ஆண்டுகளாக கணக்கிடப்பட்டது.

எடுத்துக்காட்டு:-

1700, 1800, 1900 லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 1600, 2000 லீப் வருடங்கள். அடுத்து 2400-வது வருடம் லீப் நூற்றாண்டு வருடமாகும். இடையில் உள்ள 3 நூற்றாண்டுகளின் துவக்க வருடம் (2100,2200,2300) கணக்கில் கொள்ளப்படாது.

இதன் மூலம், 130 வருடங்களுக்கு ஒருமுறை, 1 நாளைக் குறைக்க இயலும்.

கிரகோரியன் நாள்காட்டி மிகச்சரியானதா?

கிரகோரியன் நாள்காட்டியில் சராசரியாக 365.2425 என ஒரு வருடத்தின் அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது துல்லியமானது. ஆனால், மிகத்துல்லியமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வருடத்திற்கும் 27 வினாடிகள் அதிகமாக இருக்கிறது. இதனால், ஒவ்வொரு 3236 வருடத்திற்கு 1 நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும்

தற்போது, நாம் பயன்படுத்தி வரும் (கிரகோரியன்) நாட்காட்டிப்படி, 4909-ம் வருடம் ஒருநாள் அதிகமாகும்.

எனவே, இந்த நாட்காட்டியும் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், 4909-ம் ஆண்டிற்கு பிறகு நாட்கள் மாறிச்செல்லும்.

Previous articleRJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு; Techofes 2020
Next articleHardik Pandya is Back; நான்கு சிக்ஸ் & மூன்று விக்கெட்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here