Home சினிமா கோலிவுட் பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

373
0
Sasikumar Corona Awareness

Sasikumar Corona Awareness; பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ! கொரோனா பாதிப்பு காரணமாக இரவு, பகலாக நமது பாதுகாப்பிற்காக பணியாற்றி வரும் பெண் காவலர்கள் தான் ரியல் ஹீரோஸ் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் மதுரையில் சிட்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.

சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் முதல் மருத்துவர்கள், அரசியல் பிரபலங்கள், காவல் துறையினர் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுரை சிட்டி போலீஸ் ஸ்டேஷனில் காவல் துறையினர் எந்தளவிற்கு கஷடப்படும் என்பதையும், மக்களின் பாதுகாப்பிற்காக தங்களது குடும்பங்களையும் மறந்து இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், குறிப்பாக பெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ் என்று குறிப்பிட்ட சசிகுமார், யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here