Home சினிமா கோலிவுட் பிரித்து பார்த்த தமன்னா: தெலுங்கு சினிமாவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

பிரித்து பார்த்த தமன்னா: தெலுங்கு சினிமாவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!

345
0
Tamannaah Donation

Tamannaah Donation: பிரித்து பார்த்த தமன்னா: தெலுங்கு சினிமாவுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி! நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

தமன்னா தெலுங்கு சினிமாவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கின்றனர்.

சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பிரபலங்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அன்றாடம் ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவைப் போன்று தெலுங்கிலும் சினிமா தொழிலாளர்களுக்காக புதிய அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கேரளாவிலும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் மட்டும் நிதியுதவி அளித்த வருவதாகவும், நடிகைகள் உதவவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

அண்மையில், காஜல் அகர்வால், ஃபெப்சிக்கு ரூ.2 லட்சம், தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.2 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம்,  மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு ரூ.1 லட்சம் என்று மொத்தம் ரூ.6 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது தமன்னாவும் தெலுங்கு சினிமா அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள தமன்னா வெறும் தெலுங்கு சினிமாவிற்கு மட்டும் உதவியுள்ளது தமிழ் ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleSmartCop App; ஊரடங்கை மீறி வெளியில் சுத்துனா இனிமே சம்பவம் தான்
Next articleபெண் காவலர்கள்தான் ரியல் ஹீரோஸ்: சசிகுமார் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here