ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்க்ஸ்டெர்ஸ் நிகழ்ச்சியில் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வெளியிட்டதால், கோபத்தில் ஷாலு ஷம்மு நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மை காலமாக சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
ஷாலு ஷம்மு உடலை முழுவதும் பூக்களால் மறைத்து போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.
காமெடி கேங்ஸ்டெர்ஸ்
இந்த நிலையில், இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியான காமெடி கேங்ஸ்டர்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிகழ்ச்சியை, மிர்ச்சி விஜய் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் தொகுத்து வழங்கினர்.
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்கள்
இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்கள் சாப்பிடும் வரை போராட்டம் என்ற காமெடி ஷோவும், இரண்டாவதாக ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை விமர்சிக்கும் வகையில் ஒரு காமெடி ஷோவும் நடந்தது.
ஷாலு ஷம்மு
3ஆவதாக, ஷாலுவின் போட்டோவை வைத்து தான் இந்த ரவுண்டும் நடந்தது. இதில், ஷாலு ஷம்முவின் ஒவ்வொரு புகைப்படமும் இடம்பெற்றிருக்கும் போது விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து உடல் முழுவதும் பூக்கள் நிறைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய ஷாலு
இதைப் பார்த்த ஷாலு உடனடியாக கோபத்தில் அங்கிருந்து இதையெல்லாம் ஏன் போடுறீங்க…என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். ஆனால், அதன் பிறகு தொகுப்பாளர் பூர்ணிமா ரவி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தார்.
இதையடுத்து, ஆம், நான் இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். அதற்காக அதையெல்லாம் எடுத்து இப்படி செய்யலாமா? என்று கூறிவிட்டு, மீண்டும் நிகழ்ச்சியை தொடங்கினார்.
பிராங்க் செய்த ஷாலு ஷம்மு
இறுதியில் இது எல்லாமே பிராங்க் என்று கூறிவிட்டு எப்போதும் போல நிகழ்ச்சியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது புகைப்படத்தை நிறுத்திவிட்டனர்.
10 ரூபா டாக்டர்
4ஆவதாக ஒரு உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், 10 ரூபா டாக்டரை அழைத்து வந்து அவரை பேச வைத்தனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உண்மையில், நோயில்லாமல் வாழ்வதே நிறைந்த செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த குழுவினரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.