Murungaikai Chips First Look; டுவிட்டரில் டிரெண்டாகும் Murungaikai Chips ஹேஷ்டேக்! சாந்தனு நடிக்க இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Murungaikai Chips என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Murungaikai Chips என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில், லிப்ரா புரோடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், சாந்தனு ஹீரோவாகவும், அதுல்யா ரவி ஹீரோயினாகவும் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து கே பாக்யராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
திருமணமான புதுமண தம்பதிகளின் முதல் இரவில் நடக்கும் பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கியத்யங்களையும் நகைச்சுவை உணர்வோடு சுவாரஸ்மாக கொடுக்க இருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் காமெடி திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, முருங்கைக்காய்க்கு பேர் போனவர் நடிகர் பாக்யராஜ்.
அவரது பிள்ளை சாந்தனு அதே டெக்னிக்கை வைத்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.