Shirin Kanchwala இன்று தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Shirin Kanchwala நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்ட மாடல் நடிகை! தான் பார்த்து வந்த ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷிரின் கான்ச்வாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஷிரின் கான்ச்வாலா (Shirin Kanchwala Birthday) இன்று தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் நடிகை ஷிரின் கான்ச்வாலா.
கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பிறந்த ஷிரின் கான்ச்வாலா (Shirin Kanchwala) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏர் ஹோஸ்டஸாக 3 வருடம் பணியாற்றியுள்ளார்.
மாடல் மற்றும் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஜெட் ஏர்வேஸின் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டு விலகியுள்ளார். அதன் பிறகு மாடல் மற்றும் நடிப்பு மீது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
அப்போது தான் விராஜ் என்ற கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவரது முதல் படம். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படம் கன்னடத்தில் வெளியானது.
இப்படத்தைத் தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சிவகார்த்தியேனின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. கடந்தாண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து வால்டர் படத்தில் நடித்தார். இதில், சிபிராஜிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற வால்டர் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. எனினும், வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
ஆதலால் ஒரு சில படங்கள் மீண்டும் திரையிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வால்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.
மேக்னா என்ற கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஷிரின் கான்ச்வாலாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷிரின் கான்ச்வாலா…