Home சினிமா கோலிவுட் இதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ!

இதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ!

824
0
Shriya Saran Meditation

Shriya Saran Video; இதற்குத்தான் பாரீன் காதலரை திருமணம் செய்தேன்: ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் வீடியோ! நடிகை ஸ்ரேயா சரண் இதற்காகத்தான் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ளது.

தமிழைத் தவிர, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், பலரும் வீட்டில் தாங்கள் என்னெல்லாம் செய்கிறோம் என்பதை வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, பார்சிலோனாவில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், நான் ஏன் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்தேன் என்று வீட்டில் அவர் செய்யும் வேலையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், அவரது கணவர் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கிறார். அதனை காண்பித்துவிட்டு, ஒவ்வொரு கணவரும் மனைவிக்கு இப்படி உதவுங்கள் என்று கூறி அவருக்கு முத்தம் கொடுக்கிறார். அந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக, தியானம் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மன  ஆரோக்கியத்தை பாதுகாக்க, ஸ்ரேயா சரண், அவரது கணவர் ஆகியோர் மருத்துவர் உடன் தியானம் செய்தனர்.

நீங்களும் இந்த ஊரடங்கு நாட்களில் தியானம் செய்து உங்களது புகைப்படத்தை #MeditationWithShriya என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிடலாம்.

ஸ்ரேயா தியானம் செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா வைரஸ்: தப்பிய அஜித் – மிரண்டுபோன படக்குழு
Next articleசச்சின் அக்தரா அல்லது சச்சின் மெக்ராத்தா எது சிறந்த போட்டி பிராட் ஹாக் கூறுவது யாரை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here