Home சினிமா கோலிவுட் தென்பாண்டி சீமையிலே: அப்பாவின் பாட்டை தனது ஸ்டைலில் பாடிய ஸ்ருதி ஹாசன்!

தென்பாண்டி சீமையிலே: அப்பாவின் பாட்டை தனது ஸ்டைலில் பாடிய ஸ்ருதி ஹாசன்!

325
0
Shruti Haasan Thenpandi cheemayile Song

தென்பாண்டி சீமையிலே: அப்பாவின் பாட்டை தனது ஸ்டைலில் பாடிய ஸ்ருதி ஹாசன்! நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை ஸ்ருதி ஹாசன் தனது ஸ்டைலில் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் பாடிய தென்பாண்டி சீமையிலே பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் படங்களில் நடித்து வருவதும் பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது.

கமல் நடித்த ஹேராம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். ஆனால், சூர்யா நடிப்பில் வந்த 7 ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். அதோடு லண்டனில் இசை கச்சேரியும் நடத்தியுள்ளார்.

தற்போது உலகத்தையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது சகோதரியும் தனி வீட்டில் வசிக்கிறார்.

இந்த நிலையில், தனியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் அன்றாடம் தான் செய்யும் வேலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்படி ஒன்று தான் தென்பாண்டி சீமையிலே பாடல் வீடியோ.

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வந்த முக்கியமான பாடல் தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாடல் தான் அது.

இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது. யூடியூப்பில் அதிக வியூஸ் பெற்றது. என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.

தற்போது இந்த பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்தவாறு, கீ போர்டு வாசித்துக் கொண்டு பாடல் பாடியுள்ளார். அவருக்கே உரிய ஸ்டைலில் இந்தப் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்பாண்டி சீமையிலே… எனக்கு எப்போதும் பிடித்த பாடல் என என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleLOVE and LOVE only: சன் டிவியில் காதலுக்கு மரியாதை!
Next articleடுவிட்டரில் மோதிக் கொண்ட சூர்யா, தனுஷ் ரசிகர்கள்: டிரெண்டாகும் #DhanushStardomRules ஹேஷ்டேக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here