Simbu Cooking Video; பெண்கள் என்ன வேலைக்காரங்களா? சமையல் செய்த சிம்பு கேள்வி! பெண்கள் என்ன வேலைக்காரங்கள் என்று நினைத்தீர்களா என்று விடிவி கணேஷிடம் சிம்பு கேள்வி கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களை வேலைக்காரர்களாக நினைக்கக் கூடாது என்று சிம்பு கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்புவுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ்.
இவர், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்கிறார். ஏராளமான படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதோடு, சிம்புவின் நட்பு வட்டாரத்தில் இவரும் ஒருவர். ஊரடங்கிற்கு முன்னதாக இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் பேசுகிறார். அப்போது வரப்போகும் பெண்ணுக்கு வேலையே இல்லாமல் பண்ணிவிடுவீர்கள் போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் சிம்பு கூறுகையில், என்னை திருமணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்காகவா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைத்தீர்களா, அதெல்லாம் உங்களுடைய காலம் என்று பதில் கூறியுள்ளார்.
மேலும், சிம்பு கூறுகையில், பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால், சமையல் செய்யலாம்.
அவர்கள் செய்யவில்லை என்றால் என் மனைவிக்காக நான் சமையல் செய்வேன். எப்போதும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.