Home சினிமா கோலிவுட் சிம்ரனின் நம்பர் கவுண்டிங்: வைரலாகும் வீடியோ!

சிம்ரனின் நம்பர் கவுண்டிங்: வைரலாகும் வீடியோ!

0
414
Simran Tik Tok Video

Simran Tik Tok Video; சிம்ரன் தனது மகனுடன் இணைந்து 5,4,3,2,1 என்று நம்பர் கவுண்டிங் சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன் டிக் டாக் செய்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

அந்த வகையில், வீட்டில் இருக்கும் நடிகை சிம்ரன், தனது மகனுடன் இணைந்து டிக் டாக் வீடியோவில் நடித்துள்ளார்.

அதில், 5,4,3,2,1 என்று நம்பர் கவுண்டிங் சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம், சிம்ரன் நம்பர் கவுண்டிங்கிற்கு ஏற்ப கை அசைப்பதும், இறுதியாக அவரது மகன் தம்ஸ் அப் செய்வது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, இருவரும் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்று டிக் டாக் செய்வது போன்று நடித்திருந்தனர். அந்த வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக மகனை ரசிகர்களிடையே அறிமுகம் செய்வது வருகிறார். விரைவில், மகனை சினிமாவில் நடிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here