Home சினிமா கோலிவுட் ஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!

ஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!

419
0
ஹீரோ

ஹீரோ: சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் தலைப்பு!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இவர்களுக்கு அடுத்ததாக பேசப்பட்ட விக்ரம்-சூர்யா மற்றும் சிம்பு-தனுஷ் இந்த ஜோடிகளை தூக்கி சாப்பிட்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

உண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் மகுடம் சூட்டிக்கொண்டாடும் நடிகர் என சிவகார்த்திகேயன் உருவெடுத்துவிட்டார்.

சீமராஜா படம் சற்று சறுக்கினாலும் கனா படத்தின் மூலம் உடனே எழுந்துவிட்டார். அவர் அடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் sk14, பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் sk15, சிவா இயக்கத்தில் sk16 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் sk17 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

இதில் பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு ‘ஹீரோ’ எனப் பெயரிடப்பட்டு உள்ளதாம்.

இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கின்றார். இந்த படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என வேறு ஒரு தயாரிப்பாளரிடம் சண்டையிட்டு டைட்டிலை பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு. அர்ஜுன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ரெமோ, வேலைக்காரன், சீமதுரை ஆகிய மூன்று படங்களை ஆர்.டி.ராஜா தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here