சூரரைப் போற்று படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் திரையில் வெளியிடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சென்சார் சான்றிதழ் தணிக்கை குழுவின் ஒப்புதலுக்கு பின்னர் ‘U’ சான்றிதழ் பெற்று வெளியாகியுள்ளது. சூர்யாவின் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்க்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.