Home சினிமா கோலிவுட் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி!

314
0
Soori Teaching Video

Soori Teaching Video; பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி! மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடிகர் சூரி பாடம் நடத்தியுள்ளார்.

ஆன்லைன் மூலம் நடிகர் சூரி பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்.

நாடு முழவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆம் கட்ட ஊரடங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பல்வேறு துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி ஜனங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்துள்ளனர்.

லாக்டவுன் காரணமாக சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்கள், தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூரி, தனது மகன், மகளோடு நேரத்தை செலவிடும் வீடியோவை வெளியிட்டு வந்தார்.

மேலும், நிவாரண உதவிகள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஊரங்கிலும் பிஸியாக இயங்கி வருகிறார்.

அந்த வகையில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார். ஆம், பாடங்களை நினைவூட்டும் வகையில், சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் சூரி மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விடா முயற்சி குறித்தும் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

நகைச்சுவையாக இருந்த இந்த நிகழ்வை அதிகாரிகளும் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபாகிஸ்தான்: பிரபல முன்னாள் கிரிகெட் வீரர் சாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி
Next articleஇயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here