Home சினிமா கோலிவுட் கருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி!

கருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி!

308
0
Soori Jallikkattu Kaalai

Soori with Jallikattu Kaalai; கருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி! நகைச்சுவை நடிகரான சூரி காளையுடன் நடந்து சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு காளையை பிடித்துக் கொண்டு சூரி செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர், வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்து காமெடியில் கலக்கி வருகிறார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் புரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். இதன் மூலமாக பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார்.

தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையில் வரும் 12 ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சூரி, விழிப்புணர்வு வீடியோ, குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வீடியோ, சமையல் செய்யும் வீடியோ என்று தொடர்ந்து, டுவிட்டரில், தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது தான் வளர்க்கும் காளையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் – எங்க கருப்பன் நடந்து போனா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையுடன் சூரி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here