வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் நடிகை ஸ்ரீ திவ்யா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஸ்ரீ திவ்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஸ்ரீ திவ்யா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஸ்ரீ திவ்யா பிறப்பு
கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
தனது 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் வந்த ஹனுமன் ஜங்சன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து யுவராஜு மற்றும் வீடே ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த மனசாரா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.
இப்படத்திற்குப் பிறகு வந்த பஸ் ஸ்டாப் படம் ஸ்ரீ திவ்யாவிற்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
அப்போதுதான் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆம், கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தார். அதுவும், பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஸ்ரீ திவ்யாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடல் உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஊதா காலர் ரிப்பன், இந்த பொண்ணுங்களே, பார்க்காத பார்க்காத, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய பாடல்கள் இன்றும் பேசப்படுகிறது.
ஸ்ரீ திவ்யா படங்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து, வெள்ளைக்கார துரை, ஜீவா, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒத்தைக்கு ஒத்தை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ திவ்யா…