Home சினிமா கோலிவுட் ஒரே படத்தில் பல கதைகள்: சுதா கொங்கராவின் புதிய முயற்சி!

ஒரே படத்தில் பல கதைகள்: சுதா கொங்கராவின் புதிய முயற்சி!

287
1
Sudha Kongara Anthology Film

Sudha Kongara Anthology Film; ஒரே படத்தில் பல கதைகள்: சுதா கொங்கராவின் புதிய முயற்சி! ஆணவக் கொலையை மையப்படுத்தி ஒரே படத்தில் பல கதைகளை கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்குநர் சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார்.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இயக்குநர்களில் பெண் இயக்குநரான சுதா கொங்கராவும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் வந்த இறுதிச் சுற்று படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.

இதில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா விஜய்யின் தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்தப் படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்குவதால், சுதா கொங்கரா – விஜய் கூட்டணி இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாந்தனு ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படம் ஒன்றை இணையதளத்திற்காக உருவாக்கி வருகிறார்.

முற்றிலும் ஆணவக்கொலையை மையப்படுத்திய இந்தப் படத்தில், பல கதைகளும் (ஆந்தலாஜி) இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில், இந்தப் படம் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை!
Next articlePrabhas20FirstLook: பிரபாஸ்20 டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here