விஜய் நடிப்பில் திரைக்கு வந்த காதலுக்கு மரியாதை படம் இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, சார்லி, ராதாரவி, சிவக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதலுக்கு மரியாதை.
காதலுக்கு மரியாதை Aniathipravu என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. Aniathipravu இந்த மலையாள படத்தையும் இயக்குநர் ஃபாசில் தான் இயக்கியிருந்தார்.
ஃபாசில் இயக்கத்தில் வந்த மலையாள வெற்றிப் படங்களில் Aniathipravu என்ற படமும் ஒன்று.
இந்தப் படத்தைத் தான் ஃபாசில் காதலுக்கு மரியாதை என்ற டைட்டிலில் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
காதலை மையப்படுத்திய இந்தப் படம் இன்றும் ரசிகர்களிடையே கொண்டாடப்படும் ஒரு படமாக திகழ்கிறது.
ஜீவானந்தம் என்ற ரோலில் வரும் விஜய்யும், மினியாக வரும் ஷாலினியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். இவர்களது காதல் விவகாரம் ஷாலினியின் 3 அண்ணன்களுக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாக விஜய்யையும், அவரது நண்பர்களான சார்லி மற்றும் தாமுவை அடித்து துன்புறுத்துகிறார்கள்.
ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிவரும் ஷாலினி, சார்லியின் உதவியுடன் அவரது அப்பா மணிவண்ணன் குப்பத்திற்கு செல்கிறார்கள்.
அவர்களுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்க, மீண்டும் வீட்டிற்கே செல்ல இருவருமே முடிவு செய்கிறார்கள். இறுதியாக விஜய், தனது அப்பா, அம்மாவுடன் ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவர்களை பார்த்துவிட்டு வரலாம் என்று செல்கிறார்கள்.
ஆனால், அவர்களே ஷாலினியை மருமகளாக தங்களது வீட்டிற்கு அழைக்கிறார்கள். இறுதியில், விஜய் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் தொடர்ந்து காதலுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் விஜய் நடித்து வந்துள்ளார். அதில், முக்கியமான படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படம் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் – ஷாலினி இருவரும் இணைந்து கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையும் ஃபாசில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காதலுக்கு மரியாதை படம் மட்டுமல்ல, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பாடல்களாக அமைந்துள்ளன.
என்ன தாலாட்ட வருவாளா, ஆனந்த குயிலின் பாட்டு, ஒரு பட்டாம் பூச்சி, இது சங்கீத திருநாளோ, ஓ பேபி பேபி, அய்யா வீடு திறந்துதான் என்று அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், காதலுக்கு மரியாதை படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆன நிலையில், எத்தனையோ முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று காலை 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை விஜய் ரசிகர்கள் #KadhalukkuMariyadhai என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர். படம் குறித்து காட்சிகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.