Home சினிமா கோலிவுட் சூர்யா சிறந்த மனிதர் விருதுக்கு தகுதியானவரா?

சூர்யா சிறந்த மனிதர் விருதுக்கு தகுதியானவரா?

375
0
Suriya Vikatan Awards

Suriya Vikatan Award 2020; நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விகடன் விருது வழங்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது வழங்கி விகடன் (Vikatan) குழுமத்தினர் அவரை கௌரவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பு மட்டுமின்றி சமூக சேவையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.

ஆம், அகரம் ஃபவுண்டேசன் (Agaram Foundation) மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அகரம் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அகரம் ஃபவுண்டேசன் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், தரமான கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டு தேவையான வசதிகள், கல்வி தரத்தை உயர்த்த முயற்சிப்பது, கிராமப்புற மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

சூர்யா மட்டுமல்லாமல், நடிகர் சிவக்குமார், தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்நிலைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார்.

1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து அவரது இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகரம் ஃபவுண்டேசன் மூலம் கல்வி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர்.

கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு, கேரளா வெள்ளப்பாதிப்பு ஆகியவற்றிற்கும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இப்படி குடும்பத்தோடு சமூக சேவையில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை சூரரைப் போற்று படத்தின் மூலமாக விமானத்தில் ஏற்றி சென்றிருக்கிறார்.

அப்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி எனும் பாடல் வெளியிடப்பட்டது.

இப்படி, தன்னலம் கருதாமல், ஏழை குழந்தைகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் உதவி வரும் சூர்யாவின் சேவையைப் பாராட்டி விகடன் குழுமத்தினர் சூர்யாவிற்கு சிறந்த மனிதர் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இந்த விருதிற்கு சூர்யாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்களாக இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் விருது (Vikatan Award) பெற்ற பிறகு சூர்யா கூறியிருப்பதாவது: 94 ஆண்டுகளாக சாமானியர்களின் குரலாக ஒலிக்கிறது விகடன்.

முதல் தலைமுறையினராக கல்வி வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் செய்துவரும் பணிகளுக்கு உறுதுணையாய், விகடன் விருது அளித்திருப்பது உற்சாகம் தருகிறது.

சமூக மாற்றத்திற்காக அகரமுடன் கைகோர்த்திருக்கும் ஒவ்வொரு கரங்களின் சார்பாக இந்த விருதைப் பெற்று மகிழ்கிறேன்.

விகடனுக்கும், தமிழ் மக்களின் அன்பிற்கும் நன்றிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு என்ஜிகே. படத்திற்காக சிறந்த நடிகருக்கான விகடன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விகடன் விருது தனுஷிற்கு வழங்கப்பட்டது.

SOURCER SIVAKUMAR
Previous articleகோரோனாவால் யுட்யூப் தளத்தை களை எடுக்க ஆரம்பித்த கூகிள்
Next articleதோனி தான் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை – ஜஸ்டின் லாங்கர் ஓபன் டால்க்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here