Home சினிமா கோலிவுட் Navarasa Web Series: முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா!

Navarasa Web Series: முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா!

322
0
Suriya Web Series Debut

Suriya Web Series Debut; முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா! முதல் முறையாக நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக வாங்கும் சம்பளத்தை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நிதியுதவியாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யா முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதுவும், ஓடிடியில் வெளியாக இருக்கும் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க இருக்கிறார். மேலும், இதற்கு நவரசா என்று டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. 9 கதைகள் கொண்ட இந்த வெப் சீரிஸை 9 இயக்குநர்கள் இயக்க இருக்கின்றனர்.

அதில், நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும் இயக்குநர்களாக அறிமுகமாக இருக்கின்றனர். இவர்களும் இந்த வெப் சீரிஸை இயக்க இருக்கின்றனர்.

சூர்யா நடிக்க இருக்கும் எபிசோடை சித்தார்த், ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடித்த 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சபகேசன் இயக்க இருக்கிறார்.

சூர்யாவின் இந்த புதிய வெப் சீரிஸின் படப்பிடிப்பு லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு, படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்கு சூர்யா வாங்கவுள்ள சம்பளத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகள் இல்லத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது
Next articleபுஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here