Home Latest News Tamil தமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில் மொத்த கொரோனா

சென்னை: தமிழ்நாட்டில் திங்கள் கிழமை 66 பேர் கொரோனாவிற்கு பலி ஆகியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டி 2032 ஆக உள்ளது.

திங்கள் கிழமை 4,328 பேருக்கு புதிதாக கொரோனா

திங்கள் கிழமை 4,328 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சேர்த்து தமிழகத்தின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,42,798 ஆகவுள்ளது இதில் 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில்  1,140 புதிய கொரோனா

சென்னையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு 1,140 புதிய கொரோனா தொற்றுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.

மற்ற மாவட்ட கொரோனா 

மதுரையில் 464 தொற்றுகளும், கன்யாகுமரியில் 184 கொரோனா தொற்றும், ராணிபேட்டையில் 126 தொற்றுகளும், தேனியில் 134 தொற்றுகளும், தூத்துக்குடியில் 122 தொற்றுகளும், திருநெல்வேலியில் 113 தொற்றுகளும், வேலூரில் 129 தொற்றுகளும் மற்றும் விழுப்புரத்தில் 136 தொற்றுகளும் உறுதிசெய்யப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here