Suriya; இன்று ஒருநாள் தொலைக்காட்சியை ஆண்ட சூர்யா! நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பழைய படங்கள் இன்று ஒருநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் இன்றைய டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி சூரரைப் போற்று படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கு உத்தரவால், சூரரைப் போற்று ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லாக்டவுனில் பிரபலங்கள், பொதுமக்கள் என்று அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், இன்று தொலைக்காட்சியில் சூர்யா நடிப்பில் வந்த படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரது நடிப்பில் வந்த வைரஸ் தொடர்பான படம் 7 ஆம் அறிவு.
இந்தப் படம் ஜெமினி டிவியில் இன்று காலை 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
7 ஆம் அறிவு படம் தெலுங்கு 7th Sense என்ற டைட்டிலில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற டைட்டிலில் வெளியானது. இந்தப் படம் ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
சிங்கம் 2 மலையாள தொலைக்காட்சியான கைராலி டிவி பிறபகல் 3 மணிக்கும், சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கும், பசங்க 2 படம் ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மீண்டும் கைராலி தொலைக்காட்சியில் இரவு 11.30 மணிக்கு சிங்கம் 2 ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக சூர்யா நடிப்பில் வந்த 7th Sense, கேங், பசங்க 2, சிங்கம் 2 ஆகிய 4 படங்கள் இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் சிங்கம் ஒளிபரப்பு செய்யப்படுவதை முன்னிட்டு #Singam2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.