Vijayakanth Hair Cut Video; ;விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ! விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்ததோடு, டை அடித்தும், நகமும் வெட்டிவிட்டுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்துக்கு முடி வெட்டி, ஷேவ் செய்த பிரேமலதாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் இந்தியா வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் தற்போது 26 நாட்கள் ஆன நிலையில் எல்லாமே பழகிவிட்டது.
இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்போம் என்ற மன நிலைக்கு அனைவரும் வந்துவிட்டனர்.
கொரோனா காரணமாக சாதாரண பெட்டி கடை முதல் பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று அனைத்துமே மூடப்பட்டுள்ளது. மு
டி திருத்தம் செய்யும் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், வீடுகளில் ஒருவருக்கொருவர் முடி திருத்தம் செய்து கொள்கொள்கிறனர்.
அந்த வகையில், தற்போது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முடி வெட்டி, ஷேவ் செய்து, டை அடித்து, நகமும் வெட்டி விட்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஜயகாந்த் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.