Home சினிமா கோலிவுட் ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு: சிங்கம் 2 வெளியாகி 7...

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு: சிங்கம் 2 வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு!

562
0
Singam 2

Singam 2 Suriya; ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு: சிங்கம் 2 வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு! சூர்யா நடித்த சிங்கம் 2 படம் திரைக்கு வந்து இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சிங்கம் 2 படம் திரைக்கு வந்து இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில், சூர்யா, ஹன்சிகா மோத்வானி, அனுஷ்கா ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி திரைக்கு வந்த படம் சிங்கம் 2.

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்தது.

கிட்டத்தட்ட ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ.122 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று விக்கிப்பீடியாக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில், என்சிசி மாஸ்டராக பணியாற்றி வரும் சூர்யா ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக வந்து நாட்டில் நடக்கும் கள்ளக்கடத்தில் மாஃபியாவை வேறோடு களையெடுக்கும் கதையே சிங்கம் 2.

தமிழில் உருவாக்கப்பட்ட சிங்கம் 2 தெலுங்கில் யமுடு 2 என்ற டைட்டிலிலும், ஹிந்தியில், மெயின் ஹூன் சூர்யா என்ற டைட்டிலிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சிங்கம் 2 படத்தில் இடம்பெற்ற வாலே வாலே, அச்சமின்றி, புரியவில்லை, சிங்கம் டான்ஸ், விதை போல, கண்ணுக்குள்ளே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக டுவிட்டரில், #7YearsOfMassiveHitSingam2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும், சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, #SooraraiPottru மற்றும் #SudhaKongara ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here