சூரரைப் போற்று அடுத்த பாடலை அறிவித்த ஜிவி பிரகாஷ்! சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் அடுத்த பாடல் டைட்டிலை ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டைட்டிலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.
வரும் மே மாதம் திரைக்கு வரயிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா என்று அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
அதன்படி அந்தப் பாடலுக்கு காட்டுப்பயலே என்று டைட்டில் வைத்துள்ளார். இந்தப் பாடலை ரௌடி பேபி பாடலை பாடிய தீ பாடியுள்ளார்.
சினேகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். குத்தாட்டம் போட வைக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு எனர்ஜெடிக் டிராக். டான்ஸ் டிராக். மேலும், இந்தப் பாடல் எப்போது வெளியாகும் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மே 1 ஆம் தேதி காட்டுப் பயலே டைட்டில் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.