Taapsee Pannu; கழுத்தில் டாட்டூ ரகசியம் வெளியிட்ட டாப்ஸி! முக்கியமான இடத்தில் டாட்டூ வரைந்ததன் ரகசியத்தை நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ளார்.
தனது டாட்டூ குறித்த ரகசியத்தை நடிகை டாபிஸ் வெளியிட்டுள்ளார்.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை டாப்ஸி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் பிங்க் படம் வெளியானது. இதில், அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படம் தா நேர்கொண்ட பார்வை. இதில், அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிங்க் படத்தில் டாப்ஸி பறவைகள் வரிசையாக பறப்பது போன்று டாட்டூ வரைந்திருப்பார். இது குறித்து தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிங்க படத்தில் மினல் அரோரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில், வரிசையாக பறவைகள் பறப்பது போன்று டாட்டூ வரைந்திருந்தேன்.
எப்போதும் பறவைகள் சுதந்திரமாக பறக்கும். அதுபோன்று ஒரு கதாபாத்திரம் என்பதால், அந்த டாட்டூவை வரைந்திருந்தேன். படம் திரைக்கு வந்த பிறகு அது போன்று நிறைய பெண்கள் டாட்டூ வரைந்திருந்தனர்.
எனக்கு டாட்டூ வரைவது ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே 2 டாட்டூ வரைந்திருக்கிறேன். படத்தில் தற்காலிகமாக வரைந்திருந்த டாட்டூவை நான் தற்போது நிரந்தரமாகவே என் கழுத்தில் வரைந்திருக்கிறேன் என்றார்.