Home சினிமா கோலிவுட் தொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா?

தொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா?

238
0
Tamannaah Anchor

Tamannaah Anchor; தொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா? முன்னணி நடிகையான தமன்னா டாக் ஷோ ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

நடிகை தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆக்‌ஷன். தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஒரு டாக் ஷோ ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தொடங்கியுள்ள ஆஹா என்ற ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவை நடத்த இருக்கிறார்.

இந்த டாக் ஷோவை அல்லு அர்ஜூன் மற்றும் தமன்னா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமன்னாவிற்கு ஒரு எபிசோடுக்கு மட்டும் ரூ.7 லட்சம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
Next articleஆரவாரத்தோடு வந்து தெறிக்கவிட்ட வாத்தி கம்மிங்: யூடியூப்பில் 60 மில்லியன் வியூஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here