Home சினிமா கோலிவுட் என்னது துபாயில கல்யாணமா? வேண்டாம் வேண்டாம்: பிரபல நடிகர்!

என்னது துபாயில கல்யாணமா? வேண்டாம் வேண்டாம்: பிரபல நடிகர்!

340
0
Nithin Wedding

Nithin Wedding; என்னது துபாயில கல்யாணமா? வேண்டாம் வேண்டாம்: பிரபல நடிகர்! துபாயில் நடக்க இருந்த தனது திருமணத்தை பிரபல தெலுங்கு நடிகர் நிதின் ரத்து செய்து வீட்டிலேயெ எளிமையான முறையில் திட்டமிட்டுள்ளாராம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிதின். ஜெயம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பிரபலமானார். சதாவும் பிரபலமானார். படமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் இருக்கிறார். Gunde Jaari Gallanthayyinde என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். Lachhamma and Ding Ding Ding ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நிதினுக்கும், ஷாலினி என்ற பெண்ணுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், அவர்களது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதுவும், துபாயில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.

துபாய்க்கு நடிகர், நடிகைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்று அனைவரையும் அழைத்து பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இந்த நிலையில், உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக துபாயில் நடக்க இருந்த தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, ஹைதராபாத்தில் உள்ள வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

SOURCER SIVAKUMAR
Previous articleசேது உடலை சுமந்து சென்று சந்தானம் இறுதி அஞ்சலி: ஓய்வெடு நண்பா!
Next articleநாளை மீள்வாய் தாயகமே: எஸ்பிபி பாடிய கொரோனா பாடல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here