Pokuri Rama Rao; கொரோனாவுக்கு பலியான தெலுங்கு தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ்! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தெலுங்கு பட தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 6 ஆவது முறையாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர், ரணம், நேட்டி பாரதம், அம்மாயிகோசம், இன்ஸ்பெக்டர் பிரதாப் என்று பல படங்களை தயாரித்துள்ளார்.
பொக்கூரி ராமா ராவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சு திணறலும் இருந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு முன்னதாக பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் பாலிவுட் பட தயரிப்பாளர் அனில் கபூர் ஆகியோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.