Home சினிமா கோலிவுட் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

673
0
Viswasam Tamilnadu Box Office Collection

Viswasam Collection; தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.140 கோடி என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த முக்கியமான தகவல் ஒன்றை தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த சூப்பர் படம் விஸ்வாசம்.

அப்பா -மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்திய குடும்ப கதையை கொடுத்திருந்தார் இயக்குநர் சிவா.

கடந்தாண்டு அஜித்தின் மார்க்கெட்டை உயர்த்திய படங்களில் விஸ்வாசம் படமும் ஒன்று. இப்படத்திற்கு போட்டியாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் வெளியானது.

கிட்டத்தட்ட ரூ.99 கோடி பட்கெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் தமிழக வசூல் குறித்து பல தகவல்கள் வெளிவந்தது. ஆம், ரூ.125, ரூ.138 கோடி, ரூ.157 கோடி என்று பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வந்தது.

ஆனால், உண்மையான வசூல் எவ்வளவு என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து பிரபல தயாரிப்பாளார் தனஞ்செயன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம், ரூ.140 கோடி வரையில் விஸ்வாசம் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது என்று அவர் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleடாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா? பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க
Next articleகத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here