Home சினிமா கோலிவுட் Thalaivar169: ரஜினியுடன் கூட்டணி சேர்ந்த கமல் ஹாசன்!

Thalaivar169: ரஜினியுடன் கூட்டணி சேர்ந்த கமல் ஹாசன்!

300
0
Thalaivar169 தலைவர் 169 தலைவர் 169 படத்தின் பூஜை

Thalaivar169: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் பூஜை வரும் மார்ச் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார்

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 168 ஆவது படத்தில் நடித்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 168 படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரஜினியின் 168 ஆவது படத்திற்கு அண்ணாத்த என்று டைட்டில் வைக்கப்பட்டது.

தலைவர் 168 டைட்டில் அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதில், ரஜினிகாந்துடன் இணைந்து மீனா, குஷ்பு, சூரி, வேல ராமமூர்த்தி, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.

வெற்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைவர் 169 அறிவிப்பு

அதன்படி, ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் பூஜை வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக Thalaivar169 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். ரஜினியின் 39 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் – ரஜினி கூட்டணி

இதற்கு முன்னதாக, இருவரும் ஒன்றாக இணைந்து மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, தப்பு தாலங்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தாயில்லாமல் நானில்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும், தில்லு முல்லு (கமல் ஹாசன் சிறப்பு தோற்றம்) என்று 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படத்திலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ்

தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியும் அண்ணாத்த படத்தில் பிஸியாக இருக்கிறார். இதற்கு முன்னதாக, விஜய்யின் அடுத்த படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வந்தது.

ஆனால், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஜினியின் தலைவர் 169 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவியல், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினியின் தலைவர் 169 ஆவது படம் லோகேஷ் கனகராஜுக்கு 5 ஆவது படம். ஆதலால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here