Cobra First Look: டுவிட்டரில் டிரெண்டான கோப்ரா விக்ரம். அந்நியன் ரெமோ ஹேர்ஸ்டைலில் கலக்கும் நடிகர் சியான் விக்ரம். சினிமா செய்திகள். cinema news in tamil.
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், கோப்ரா மற்றும் சியான் விக்ரம் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் கடாரம் கொண்டான். இயக்குநர் ராஜேஷ்ம் எம்.செல்வா இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான படம் தான் கடாரம் கொண்டான்.
இதில், விக்ரமுடன் இணைந்து அக்ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
விக்ரம்58
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இது விக்ரமின் 58 ஆவது படம். இதில், இவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.
இவர்களுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கோப்ரா – Cobra First Look
ஹீரோயினுக்கும், கோப்ராவிற்கும் உள்ள தொடர்புதான் படத்தின் டைட்டில். அதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளுக்கு கச்சிதமாக இருக்கும் வகையில் தான் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார்.
சென்னை, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.
கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்
இந்த நிலையில், இன்று இது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், வரும் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நடிகர் சியான் விக்ரம் மற்றும் கோப்ரா என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் நிலையில் அந்நியன் படத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அந்நியன்
அந்நியன் லுக்கில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தான் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த போஸ்டரில் அதிக உடல் எடையுடன் இருப்பது போன்றும் நரம்புகள் புடைத்துக் கொண்டு இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோப்ரா படத்தைத் தொடர்ந்து, விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும், மகாவீர் கர்ணா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.