cook with comali bala: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலக்கப்போவது யாரு புகழ் பாலாவிற்கு நடிகை வனிதா சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுக்கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் கலையை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 27 எபிசோடுகள் வரை சென்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்துள்ளது.
குக் வித் கோமாளி
இந்நிகழ்ச்சியில், வனிதா, ரேகா, உமா ரியாஷ், மோகன் வைத்யா, ரம்யா பாண்டியன், தாடி பாலாஜி, ஞானசம்பந்தம், ப்ரியங்கா ரோபோ சங்கர் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் இணைந்து கோமாளிகளாக கலக்கப்போவது யாரு பாலா, புகழ், தங்கதுரை, தொகுப்பாளினி மணிமேகலை, பப்பு, சாய் சக்தி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்
இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு வனிதா, உமா ரியாஷ், ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா ஆகியோர் தகுதி பெற்றனர். இதையடுத்து, கடந்த 23 ஆம் தேதி குக் வித் கோமாளியின் இறுதிப் போட்டி நடந்தது.
இதில், வனிதா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
2ம் இடம் பிடித்த உமா ரியாஷிற்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ரம்யா பாண்டியன் 3 ஆம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமாளிகள் – cook with comali bala
இதே போன்று கோமாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், தீனா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் பலர் நடிப்பில் வந்த தும்பா என்ற படத்தில் பாலா அறிமுகமாகியுள்ளார்.
தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதாவுடன் கலந்து கொண்ட பாலாவிற்கு வனிதாவே சினிமாவில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
பாலாவுக்கு சினிமா வாய்ப்பு
இது குறித்து அவர் கூறுகையில், இப்போது நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது பஞ்சாயத்து பரமேஸ்வரி போன்ற ஒரு கதாபாத்திரம். இதற்காக நான் பைக் ஓட்ட வேண்டும்.
ஆனால், எனக்கு பைக் ஓட்டுவதற்கு தெரியாது. படத்திற்காகவே நான் பைக் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டு வருகிறேன்.
வெள்ள காக்கா மஞ்ச குருவி
இப்படத்தின் இயக்குநரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். வெள்ள காக்கா மஞ்ச குருவி என்ற படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலா வேண்டும் என்று நாம் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டு பாலாவை நடிக்க வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் 9-க்கு நடுவராக வனிதா வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.